Published : 13 Aug 2022 06:10 AM
Last Updated : 13 Aug 2022 06:10 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் அன்னதான கூடத்தில் பக்தர்கள் அலைக்கழிக் கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ராஜ கோபுரம் அருகே உள்ள அன்னதான கூடத்தில் தினசரி பிற்பகல் சுமார் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்துக்கு செல்வந்தர்கள் நிதியுதவி அளிக்கின்றனர். அன்னதான கூடம் உள்ளே சென்று உணவு சாப்பிடுவதற்கு, பக்தர்களிடம் டோக்கன் விநி யோகிக்கும் முறை கடைபிடிக் கப்படுகிறது.
இந்நிலையில், அன்னதான கூடத்தை தேடி செல்லும் பக்தர்கள் தொடர்ந்து அலைக்கழிக் கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. சாதாரண நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் உள்ளதால் அமைதியாக கடந்துவிடுகிறது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடு முறை நாட்களில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. வரிசையில் வரும் பக்தர்களிடம் கெடுபிடி காட்டப்படுகிறது. இதனால், தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் வேதனை அடைந்து திரும்பி செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டு விடுகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “அன்னதானத்தை தேடி வரிசையில் காத்திருக்கும் வெளியூர் பக்தர்களுக்கு மதிப் பில்லை. பல வழிதடங்களில் அன்னதான கூடத்துக்கும் தினசரி வந்து செல்லும் பழகிய முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களிடம் டோக்கன் கேட்பது கிடையாது.
அன்னதான கூடத்தில் இருந்து ஹாட் பாக்ஸ், அட்டை பெட்டி, வாளி மற்றும் கேரியர்கள் மூலம் உணவு, வெளியே கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. உணவை கொண்டு செல்லும் பணியாளர்களிடம் கேட்கும் போது, அலுவலகத்துக்கு கொண்டு செல்கிறோம் என்கின்றனர்.
கோயில் பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், காவலர்களிடம் முறையிட்டும் பலனில்லை. ஆனால், டோக்கன் பெற்றிருந்தால் மட்டுமே அனு மதிப்போம் என பக்தர்களை மட்டுமே விரட்டுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர் களுக்காகவே அன்னதான திட்டம் என்பது கொண்டு வரப்பட்டது. ஆனால், தி.மலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.
டோக்கன் முறையை கைவிட்டு பக்தர்களை வரிசையாக அனுமதித்து அன்னதானம் வழங்க வேண்டும். இதில் பாகுபாடு பார்க்கக் கூடாது. திருப்பதி, பழனி உள்ளிட்ட கோயில்களை போன்று அன்னதானத்தை தேடி வரும் பக்தர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
அன்னதான திட்டத்தை செம்மையாக செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து கோயில் தரப்பில் விசாரித்தபோது, “பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்போது, சிக்கல் எழுகிறது. அவை சரி செய்யப்படும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முழு நேரம் அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் தொடங்கியதும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment