Published : 12 Aug 2022 02:57 PM
Last Updated : 12 Aug 2022 02:57 PM
சென்னை: சுதந்திர தினத்தையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து புகார்கள் வரும்போது எல்லாம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனால், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு இன்று இரவு பயணம் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல ரூ.2,300 வரையும், சென்னையில் இருந்து கோவைச் செல்ல ரூ.3000 வரையும், மதுரை, நெல்லைக்கு செல்ல ரூ.3,500 வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT