Published : 18 Oct 2016 09:01 AM
Last Updated : 18 Oct 2016 09:01 AM

சபரிமலை கோயில் மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக பாலக்காடு ஒத்தபாலத்தைச் சேர்ந்த டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகை புரம் மேல்சாந்தியாக கோட்டயம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த மனுகுமார் நம்பூதிரி தேர் வானார்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் பூஜை களை முன்னின்று நடத்துபவர்கள் மேல்சாந்திகள் என அழைக்கப் படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்துக்கு முன்னதாக புதிய மேல்சாந்திக்கான தேர்வு நடைபெறும். ஐயப்பனுக்கும் மாளிகைபுரத்து அம்மனுக்கும் தனித்தனியாக மேல்சாந்திகள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார்கள்.

மேல்சாந்தியாக வருபவர்கள் கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட நம்பூதிரிகளாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பிரபல மான கோயில்களில் பூஜை செய்த அனுபவம் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகளைக் கொண் டவர்கள் மேல்சாந்தி பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த நம்பூதிரி களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் முன்னிலையில் முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடை பெறும். தாழமண் மடத்தின் சபரி மலைக்கான தந்திரிகள் இருவர், இந்த நேர்முகத் தேர்வை நடத்து வர். இதன்மூலம் முதல்கட்டமாக ஐயப்பனுக்கும் மாளிகைபுரத்தம்ம னுக்கும் தலா 12 நம்பூதிரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதிலிருந்து ஐயப்பன் சன்னதியில் குலுக்கல் முறையில் தலா ஒருவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவர்.

முதல்கட்ட தேர்வில் தேர்வாகும் 12 பேரின் பெயர்களும் தனித்தனி சீட்டுகளில் எழுதி ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் போடப்படும். இன் னொரு கிண்ணத்தில் 11 வெற்றுச் சீட்டுகளும் ‘மேல்சாந்தி’ என்று எழுதப்பட்ட ஒரே ஒரு சீட்டும் சேர்க் கப்படும். பந்தளம் மகாராஜாவின் வாரிசு வழிவந்த பத்து வயதுக் கும் குறைவான ஒரு சிறுவனும் சிறுமியும்தான் குலுக்கல் சீட்டு களை தேர்வு செய்து கொடுப்பர். இதற்காக குழந்தைகள் இருவரும் குலுக்கல் நாளன்று பம்பையில் நீராடி இருமுடி சுமந்து அழைத்து வரப்படுவர்.

ஐயப்பன் சன்னதியில் குலுக்கல் நடைபெறும். பெயர் எழுதிய சீட்டுக் கள் கொண்ட கிண்ணத்தில் இருந்து ஒரு சீட்டும் இன்னொரு கிண்ணத் தில் இருந்து ஒரு சீட்டும் எடுக்கப் படும். யாருடைய பெயர் எடுக்கப் படும்போது இரண்டாவது கிண்ணத் தில் இருந்து ‘மேல்சாந்தி’ என்ற சீட்டு எடுக்கப்படுகிறதோ அவர்தான் அடுத்த மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார். இதேபோல்தான் மாளிகைபுரத்துக்கும் தேர்வு நடக்கும்.

இந்த வழிமுறைகளின்படி இந்த ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வுக் கான முதல்கட்டத் தேர்வுகள் செப்டம்பர் இறுதி வாரத்தில் நடைபெற்றன. இதில் ஐயப்பன் கோயில் மேல்சாந்திக்காக 14 நம்பூதிரிகளும் (தகுதியான நபர் களாக இருந்ததால் வழக்கத்தை விட கூடுதலாக இருவர் தேர்வு செய் யப்பட்டனர்) மாளிகைபுரத்தம்மன் கோயில் மேல்சாந்திக்காக 12 நம் பூதிரிகளும் தேர்வு செய்யப் பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் நேற்று குலுக்கல் நடை பெற்றது. குலுக்கலில் பங்கேற் பதற்காக பந்தளம் மகாராஜாவின் வழிவந்த வாரிசுகளான செல்வன் நவீன் வர்மாவும், குமாரி லாவண் யாவும் இருமுடி சுமந்து சபரிமலைக்கு வந்திருந்தனர்.

இதில், ஐயப்பன் கோயில் மேல் சாந்தியாக பாலக்காடு ஒத்தபாலத் தைச் சேர்ந்த டி.எம்.உன்னி கிருஷ் ணன் நம்பூதிரியும் மாளிகைபுரத் தம்மன் கோயில் மேல்சாந்தியாக கோட்டயம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த மனுகுமார் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x