Published : 11 Aug 2022 05:04 AM
Last Updated : 11 Aug 2022 05:04 AM
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 11-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். 12, 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
10-ம் தேதி காலை 8.30 வரை நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 14 செமீ., அவலாஞ்சியில் 11 செமீ., மேல் கூடலூரில் 10 செமீ. மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT