Published : 02 Oct 2016 11:02 AM
Last Updated : 02 Oct 2016 11:02 AM
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண் ணால் ஆன உருவங்களால் என்னை பூ ஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சவுபாக்கியங்களையும் அளிப் பேன்’ என்று, தேவி புராணத் தில் அம்பிகை கூறியதன்படி, சுரதா மகாராஜா பொம்மைகளைக் கொண்டு வழிபட்டு, தன் பகைவர் களை வீழ்த்தி, அவர்களின் இன்னல்களில் இருந்து விடுதலை பெற்றான் என்பது புராணக் கதையின் நம்பிக்கை. அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரி வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது.
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறை நிலையுடன் கலக்க வேண்டும் என்ற தத்து வத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் ‘படிகள்’ அமைக்கப் படுகின்றன. அதில் ஐம்பூதத்தின் சிறப்புடைய மண்ணால் ஆன பொம்மைகள் அடுக்கி வைக்கப் படுகின்றன.
கொலுவின் முதல் படியில் இருந்து தாவரம், பூச்சிகள், வி லங் குகள், மனிதர்கள், மகான்கள், தெய்வங்கள் என வரிசையாக இடம்பெறுகின்றன. ஓருயிர் நிலையில் இருந்து உயிரானது மனிதப் பிறவியை அடைந்து மகான், தெய்வம் என்ற உயர் நிலையை அடைய வேண்டும் என்பதை கொலு உணர்த்துகின்றது
தொடக்கத்தில் களிமண்ணால் ஆன பொம்மைகள் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது காகிதக் கூழ் பொம்மை களும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், களிமண்ணால் ஆன பொம்மைகள் தயாரிப்பில் கடந்த 4 தலைமுறைகளாக ஈடு பட்டு வருகிறார் பண்ருட்டி சம்மந் தம். இந்தத் தொழிலில் கடந்த 65 வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து ஈடுபட்டு வரும் சம்மந்தம், தனது மகன்களையும் இத்தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “எனது தாத்தா அப்பாளு பத்தர் இந்தத் தொழிலை செய்து வந்தார். எனது தந்தை, நான், எனது மகன்கள் என தொடர்ந்து களிமண்ணால் ஆன கொலு பொம்மைகளை செய்து வருகிறோம்.
நவீனத்தை ஏற்காமல் எந்தவொரு கலையும் உயிர்ப்புடன் இருக்க முடியாது. எங்கள் பொம் மைகள் பழமையும் புதுமையும் கலந்தே இருக்கும்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மாதிரி யான சூழ லியலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் களி மண்ணில் பொம்மைகளை உருவாக்கு கிறோம். பாதிப்பில் லாத செயற்கை சாயங்களை பயன்படுத்துகிறோம்.
எனது தந்தை சின்னச்சாமி பத்தர் காமராஜர், எம்ஜிஆர் ஆகி யோருடன் நேரடி தொடர்பில் இருந் துவந்தார். எனவே தியாகிகளை சிலையாக செய்து கொடுத்தோம்.
பின்னர் பூம்புகார் நிறுவனத் துக்கும் கொலு பொம்மைகள் மட்டுமின்றி சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகள் உள்ளிட்டோரின் பொம்மைகளையும் செய்து கொடுத் தோம். மைசூருவில் உள்ள நி று வனம் எங்களிடம் களிமண்ணால் ஆன பொம்மைகளை கொள்முதல் செய்கிறது.
தசாவதாரம், ராமாயணம், அஷ்ட லட்சுமி, விநாயகர், கும்பகர்ணன், கடோத்கஜன், குபேரன், திருமலை, கோபியர் நடனம், தர்பார், கிரிக்கெட் விளையாட்டு, சங்கீத மும்மூர்த்தி கள், வைகுண் டம் போன்ற பொம் மைகளை தயாரித்து வருகிறோம். பழங்கா லத்தில் குளங்கள், கால் வாய்கள் மற்றும் ஆற்றுப் படுகை களில் இருந்து களிமண் எடுத்து கொலு பொம்மைகள் செய்யப்பட் டன.
பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு
இடைப்பட்ட காலத்தில் புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக பிளாஸ் டிக் பொம்மைகள் கொலுவை ஆக்கிரமித்திருந்தன. ஆனால் சுற்றுச்சூழல் குறித்த விழிப் பு ணர்வு அதிகரித்துள்ளதால் களி மண்ணாலான பொம்மைகளுக்கு தற்போது தேவை அதிகரித்துள் ள து. இருந்தபோதிலும், உற்பத்தி செய்வதற்கான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT