Published : 09 Aug 2022 04:28 PM
Last Updated : 09 Aug 2022 04:28 PM
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மேடையில், முன்னாள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் குறித்த குறிப்புகளுடன் கூடிய திரையிடலும் ஒளிபரப்பப்பட்டன.
மேலும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பார்வையாளர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பாக பெண்களின் பங்கெடுப்பை எடுத்துக் கூறும் வகையில், சுதந்திர போாரட்ட வீரர்களான தில்லையாடி வள்ளியம்மை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பலரது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, ஆவணப்படங்களும் திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 5 முறை உலக செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT