Published : 04 Oct 2016 12:53 PM
Last Updated : 04 Oct 2016 12:53 PM
உள்ளாட்சித்தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதால் ஹோட்டல்களில் அரசியல் கட்சியினர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. வழக்கமான வாடிக்கையாளர்கள் சாப்பாடு கிடைக்காமல் சிரமம் அடைந்துள்ளனர்.
உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று திமுக, காங்கிரஸ், தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சைகள் அதி களவு வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள், ஆட்டோ, கார்கள், பைக்குகள் அணிவகுக்க ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனால், நேற்று நகரில் மண்டல அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள் அமைந்திருக்கும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. உள்ளாட்சித்தேர்தல் திருவிழா தொடங்கியதால் கடந்த சில நாட்களாகவே ஆட்டோ, கார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு நாளைக்கு நன்றாக சவாரி கிடைத்தாலே ரூ.400க்கு மேல் கிடைக்காது. ஆனால், வேட்பாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை தருவதால் மாநகரில் ஆட்டோக்களில் 60 சதவீதத்துக்கு மேல் வேட்பாளர்கள் வேட்புமனு, பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டன. அதனால், ஆட்டோக்களுக்கு மவுசு அதிகமாகி கட்டணமும் வழக்கத்தை விட உயர ஆரம்பித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மொ த்தமாக மது பாட்டில்களை விநியோகம் செய்யக்கூடாது. ஆனால், அரசியல் கட்சியினருக்கு பயந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மது பாட்டில்கள் விற்பதால் வழக்கமான குடிமக ன்கள், விருப்பமான மது பாட்டில்கள் கிடைக்காமல் தவிக் கின்றனர்.பெட்ரோல் பங்க்குகளில் அரசியல் கட்சியினர் பெட்ரோல் போடுவதற்கு குவிவதால் பங்க்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், நீண்ட வரிசையில் பெட்ரோல் போடுவதற்கும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஹோட்டல்களில் காலை டிபன், மதியம், சாப்பாடு இரவு சாப்பாடு சாப்பிடுவதற்கு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
பிரச்சாரத்திற்கு வந்த தொண்டர்கள், நிர்வாகிகள் சாப்பிடுவதற்காக ஹோட்டல்களில் வேட்பாளர்கள் நிரந்தர அக்கவுண்ட் திறந்துள்ளனர். நேற்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் காலை, மதியம், இரவு நேரங்களில் அசைவ ஹோட்டல்களில் பார்சல் சாப்பாடுகளை அரசியல் கட்சியினர் ஒட்டுமொத்தமாக வாங்கி சென்றனர். ஹோட்டல்களில் அதிகமான அரசியல் கட்சியினர் குவிந்ததால் வழக்கமான வாடிக் கையாளர்கள் சாப்பிட இடம், உணவு கிடைக்காமல் தவித்தனர்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமை யாளர் சிலரிடம் கேட்டபோது, வழக்கமாக சமைத்து வைக்கும் சாப்பாட்டை விட கூடுதலாக சமைக்கிறோம். ஆனால், தற்போது தேவை அதிகமாக இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. இந்த பிரச்சனை அசைவ ஹோட்டல்களில் அதிகமாக இரு க்கிறது. உள்ளாட்சித்தேர்தல் முடியும் வரை, வழக்கமான வாடிக்கையாளர்களையும் திருப்தி செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதால் மதிய உணவை காலையிலேயே தயாரித்து வைக்க ஆரம்பித்துள்ளோம். தேர்தல் வரை இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்யும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT