Published : 08 Aug 2022 07:38 PM
Last Updated : 08 Aug 2022 07:38 PM
சேலம்: ஏற்காடு, செம்மநத்தம் கிராமத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட ஆட்சியர் கார்மேகம், அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்திய இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஏற்காடு, செம்மநத்தம் கிராமத்தில் ஆட்சியர் கார்மேகம் நேற்று இரவு ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, இரண்டு லாரிகளில் மரங்கள் வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்டது. அந்த இரண்டு லாரிகளையும் ஆட்சியர் கார்மேகம் நிறுத்தி, மரம் வெட்டி எடுத்து செல்ல உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும், அதற்கான ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
ஏற்காடு புத்தூர் கிராமத்தில் இருந்து மரங்களை அனுமதியின்றி வெட்டி, லாரிகளில் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்யப்பட்டு, வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஏற்காடு வட்டாட்சியர் அலுவலர்கள் இரண்டு லாரிகளையும், ஏற்காடு வனச் சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் விசாரணையில், புத்தூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பயிரிடப்பட்ட சில்வர் ஓக் மரங்கள், அரசின் அனுமதி இல்லாமல் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, மேல் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT