Published : 06 Aug 2022 12:07 PM
Last Updated : 06 Aug 2022 12:07 PM

நீட் மசோதா குறித்த மத்திய அரசின் 16 கேள்விகளுக்கு பதில்கள் அனுப்பி வைப்பு: மா.சுப்பிரமணியன் தகவல் 

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2-ம் ஆண்டை தொடக்கத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது "மக்களைத் தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் துவங்கி வைத்தார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் துவங்கியது. அந்தத் திட்டம் 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்தத் திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தில், 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது. 1,56,57,595 மருந்து பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 83,73,724 மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மருந்து காலியாகி விட்ட நபருக்கு ரிபீட்டட் சேவை முறையில் வழக்கப்பட்டு உள்ளது..

நோயாளிகளின் உடம்பில் உள்ள குறைபாடுகள் பற்றி அறிந்துகொள்ள சுகாதார குடும்ப புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் மருத்துவ குடும்ப அட்டை வழங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தை பொறுத்தவரை சென்னையில் கால தாமதாம் ஆகினாலும் 15,75,400 பேர் பரிசோதனையில் உட்படுத்த உள்ளனர்.

இந்தத் திட்டத்தின் பயன் முக்கியமாக மலைவாழ் மக்களுக்கு முதலில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திட்டம் சென்னையில் தாமதமாக ஆகியுள்ளது. கிராமப்புற மக்களின் மருத்துவம் பார்க்க இந்தத் திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்கள் மேல் உள்ளனர். 19,535 பேர் இந்தத் திட்டத்திற்கு முழுவதுமாக செயல்பட்டு வருகிறோம். இன்னும் 2 ஆயிரம் பேரை இந்தத் திட்டதிற்கக்காக தேசிய சுகாதார திட்டம் நியமிக்க உள்ளது.

நீட் விலக்கில் தமிழகம் தான் தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.

சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் செவிலியர்கள் குறைபாடு இருந்து வருவது உண்மைதான். தற்போது இந்த காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான நேர்காணல்கள் சென்று கொண்டிருக்கின்றது. வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் தமிழக முழுவதும் இருக்கக் கூடிய அரச மருத்துவமனைகளில் காலி பணியிடங்களில் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x