Published : 04 Oct 2016 09:22 AM
Last Updated : 04 Oct 2016 09:22 AM

சீட் கிடைக்காத அதிமுகவினர் வீடுகளில் முடங்கினர்: அதிருப்தியாளரை சரிகட்ட முடியாமல் மாவட்டச் செயலாளர்கள் தவிப்பு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சீட் கிடைக்காத அதிமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் வீடுகளில் முடங்கினர். அவர்களை மாவட்டச் செயலாளர்கள் சரிகட்ட முடியாததால் அதிமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் 25 முதல் 30 சதவீதம் தற்போதைய கவுன்சிலர் களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை. மதுரை மாநகராட்சியில் அதிக பட்சமாக தற்போதிருந்த 42 கவுன்சிலர் களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் அதிருப்தியடைந்த சீட் கிடைக்காத கவுன்சிலர்கள், நிர்வாகிகள் சென் னைக்கு சென்று கட்சித் தலைமைக்கு புகார் செய்தனர். தெரிந்த மாநில, நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டனர். அவர்களோ, தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், எதுவும் செய்ய முடியாது அமைதியாக இருங்கள், போட்டி வேட்பாளராக களம் இறங்காமல் தேர்தல் வேலை யில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கி யுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிருப்தி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் தங்களு டைய புகார் மனுக்கள் முதலமைச்சர் ஜெயலலிதா பார்வைக்கு சென்றடைந் திருக்க வாய்ப்பு இல்லாததால் விரக்தியடைந்த அவர்கள் தற்போது தேர்தல் வேலைகளில் ஆர்வமில்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்தபோதே அதிமுக வேட்பாளர்கள், சீட் கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகளையும், தற் போதைய கவுன்சிலர்களையும் வீடு தேடிச் சென்று சமாதானம் செய்து ஒத்துழைக்குமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களோ உடல்நலம் சரியில்லை, வருகிறேன் என காரணங்கள் சொல்லி உடன் செல்லவில்லை. கடந்த காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படும்போது கட்சித் தலைமைக்கு பயந்து, மாவட்டச் செயலாளர்கள் சொன்னாலே விரக்தி, அதிருப்தியை வெளியே காட்டிக் கொள்ளாமல் வேட்பாளர்களுடன் இணைந்து அவர்கள் வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

ஆனால், தற்போது அதற்கு நேர்மாறாக அதிமுகவின் நிலை இருக்கிறது. முதல்வர் உடல்நிலை மீதே அனைவர் கவனமும் இருப்பதால் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி நிர்வாகிகளை அழைத்து கண்டிக்கவும், பேசவும் முடியவில்லை.

மேலும், தற்போது அவர்கள் பேச்சையெல்லாம் கேட்கும் மனநிலை யில் அதிருப்தி நிர்வாகிகளும் இல்லை. அதனால், சீட் கிடைத்து வேட்பாளராகி விட்டாலும் தற்போது வார்டுகளில் நிலவும் அதிருப்தி நிர்வாகிகள், ‘சிட்டிங் கவுன்சிலர்கள் உள்ளடி வேலைகளால் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x