Published : 05 Aug 2022 04:20 PM
Last Updated : 05 Aug 2022 04:20 PM
சென்னை: தமிழகத்தில் பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் தகவல்களை தன்னார்வ முறையில் சேகரிக்க சுகாதாரத் துறை உத்தவிட்டடுள்ளது.
தமிழகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மூலம் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்து ஆன்லைன் மூலம் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து அதற்கு தேவையான ஆவணங்களை மட்டும் அளித்தால் போதும்.
பிறப்பு பதிவின்போது மருத்துவமனைச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் விவரங்கள் தொடர்பாக தகவலையும், இறப்பு பதிவின்போது இறப்பு மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே அளித்தால் போதும்.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் தகவல்களை தன்னார்வ முறையில் சேகரிக்க சுகாதாரத் துறை உத்தவிட்டடுள்ளது. இதன்படி தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநயாகம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி பிறப்பு, இறப்பு பதிவு செய்து வரும்போது அவர்களிடம் ஆதார் தகவல் கேட்கப்படும். அப்படி கேட்கும்போது அவர்கள் விரும்பினால் ஆதார் தொடர்பான தகவலை அளிக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT