Published : 23 Oct 2016 01:14 PM
Last Updated : 23 Oct 2016 01:14 PM
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாரதியின் வரி களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வள்ளுவருக்கும், திருக் குறளுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் நகை வடி வமைப்புத் தொழில் செய்துவரும் சூர்யவர்மன் (29).
தமிழ் மொழியை எழுத, படிக்கத் தெரியாத நிலையிலும் வள்ளு வர் மீதும், அவர் படைத்த திருக்குறள் மீதும் கொண்ட பற்றின் காரணமாக, திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களில் உள்ள 100 குறள் வெண்பாக்களை வெள்ளித் தகடுகளில் செதுக்கி அசத்தியுள்ளார் சூர்யவர்மன்.
திருவள்ளுவர் மீது பற்று
இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: “நான் தமிழ்நாட்டுக்காரன் தான். ஆனால், பிறந்து வளர்ந்தது ஹைதராபாத்தில். எனக்கு சுத்த மாக தமிழ் எழுதவும் படிக்கத் தெரியாது. நகை வடிவமைப்புத் தொழிலில் 12 ஆண்டுகள் அனுப வம் கொண்ட எனக்கு, கேள்வி ஞானத்தின் மூலம் உலகப் பொது மறையான திருக்குறளின் மீதும் திருவள்ளுவரின் மீதும் பற்று ஏற்பட்டது. குறிப்பாக திருக்குறளின் சிறப்புகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பட்டிமன்றம், இலக் கிய நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து கொண்டேன். திருக்குறளை இன் னும் பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனக்குத் தெரிந்த கைத்தொழில் மூலமே அதை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த அடிப்படையில்தான் திருக்குறளை வெள்ளித் தகடுகளில் செதுக்க ஆரம்பித்தேன்.
இதன் முதல் முயற்சியாக, திருக்குறளில் உள்ள முதல் 10 அதிகாரங்களில் இருக்கும் 100 குறள்களை வெள்ளித் தகட்டில் செதுக்கியுள்ளேன். சுத்தமான வெள்ளியை உருக்கி தகடுகளாக மாற்றிக்கொண்டேன். அதில் தமிழ் எழுத்துகளை சரியான அளவில் செதுக்கி தனியாக வெட்டி எடுத்து, அதற்காக செய்த மரப் பலகையில் ஒட்டிவிடுவேன். பாலீஷ் செய்த பிறகு பார்த் தால் எழுத்துகள் எல்லாம் பளபள வென்று காணப்படும். இதனை அருங்காட்சியகங்களில் பார் வைக்கு வைக்கலாம். பொக்கிஷ மாகவும் வைத்து பாதுகாக்கலாம்.
ஒவ்வொரு திருக்குறளையும் வெள்ளித் தகட்டில் செதுக்கி முடிக்க 4 மணி நேரம் செலவிட வேண்டும். எனது வாழ்வாதாரமாக இருக்கும் நகைத் தொழிலையும் கவனிக்க வேண்டிய நிலையிலும் திருக்குறளுக்காக பல பகல், இரவுகளை செலவிட்டுள்ளேன்.
வெள்ளித் தகட்டில் 100 திறக்குறளை செதுக்குவதற்காக 400 கிராம் வரை சுத்தமான வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 மாத கடும் உழைப்பில் இது சாத்தியமாகியுள்ளது. இது போலவே அனைத்து திருக்குறளை யும் செதுக்கிட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அனைத்துக் குறள்களையும் செய்து முடிக்க குறைந்தது 4 கிலோ வரை வெள்ளி தேவைப்படும். அன்புடையோர் யாரேனும் உதவி செய்தால் இந்த இலக்கை எட்ட முடியும் என்றார் உறுதியுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT