Published : 04 Aug 2022 01:15 PM
Last Updated : 04 Aug 2022 01:15 PM

தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 9896 குழந்தைகளுக்கு ரூ.303 கோடி இழப்பீடு

சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 9896 குழந்தைகளுக்கு ரூ. 303 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தியது. கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், ஒருவரை மட்டும் இழந்த பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்தத் தொகை குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டு அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களில் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி மாவட்ட குழந்தைகள் நலக்குழு குழந்தைகளின் பட்டியல் பெறப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த 8.5.2021 முதல் 30.6.2022 வரை பெற்றோர் இருவரையும் இழந்த 322 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 16,10,00,000 ரூபாயும், ஒருவரை மட்டும் இழந்த 9565 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் 286,95,00,000 ரூபாயும், 9 இலங்கை தமிழகர்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் 27,00,000 ரூபாய் என்று மொத்தம் 9896 குழந்தைகளுக்கு 303,32,00,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x