Published : 04 Aug 2022 12:08 PM
Last Updated : 04 Aug 2022 12:08 PM
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் ஈரநில அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் ஈரநில அங்கீகாரம் கிடைத்துள்ளது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் (கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்) இன்று ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப் போகிறது. இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்" இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Extremely happy that 6 more wetlands in TN (Koonthankulam Bird Sanctuary, Gulf of Mannar Marine Biosphere Reserve, Vembannur Wetland Complex, Vellode Bird Sanctuary, Vedanthangal Bird Sanctuary & Udhayamarthandapuram Bird Sanctuary) have got the Ramsar site recognition today. pic.twitter.com/nYGQqBWNBE
— M.K.Stalin (@mkstalin) August 3, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT