Published : 03 Aug 2022 06:55 PM
Last Updated : 03 Aug 2022 06:55 PM
சென்னை: தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோரிடம் அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மேலும், இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன்படி மாடுகள் பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,5,6,8,9,10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் தினசரி 5 மாடுகளும், 3 மாடுகளும் பிடிக்கப்படுகிறது. எனவே, ஒரு வாரத்தில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள 7 மண்டலங்களில் 35 மாடுகளும், மற்ற மண்டலங்களில் 21 மாடுகளையும் பிடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை செய்து அபராதம் விதிப்பதற்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 4,6,8,10 மற்றும் 13 மண்டலங்களில் தினசரி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், மற்ற மண்டலங்களில் தினசரி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT