Published : 03 Aug 2022 09:30 AM
Last Updated : 03 Aug 2022 09:30 AM
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் தில் சோலார் பேனல்களைக் கொண்டு பேருந்து பயணிகள் நிழற்கூரை வடி வமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்களால் ஆன பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூரையில் இரவில் வெளிச்சம் இன்றி காணப்படும். இதனால் அப் போது சமூக விரோதிகளின் கூடாரமாகப் பயணிகள் நிழற்கூரை மாறிவிடுகிறது.
இதைத் தவிர்க்க திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் கிராமிய எரிசக்தி மையம் சார்பில் சோலார் பேனல்களைக் கொண்டு பேருந்து பயணிகள் நிழற்கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூரைக்குப் பதில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிழல் தருவதுடன் சூரிய மின்சக்தியும் தயாரிக்கிறது. சோலார் பேனல்களின் கீழே ஒருபுறம் நான்கு பேர் என இருபுறமும் எட்டு பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த இருக்கைகளுக்குள் பேட்டரி கள் வைக்கப்பட்டு அதில் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இருக்கைக்கு கீழே பவர் பிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில் மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ளமுடியும்.
மேலும் இரவில் நிழற்கூரைக்கு தேவையான விளக்குகள், மின்விசிறி ஆகியவையும் பொருத்தப்பட்டு முழு வதும் சூரிய ஒளி மின்சக்தியால் செயல்படும் வகையில் பயணிகள் நிழற்கூரை உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் எரிசக்தி மைய பேராசிரியர் கிருபாகரன் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது:
முற்றிலும் சூரிய ஒளி மின் உற்பத்தியைக் கொண்டு இயங்கும் வகையில் பயணிகள் நிழற்கூரை ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடி வமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை நிகழ்வாக இந்த தயாரிப்பை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் அனுமதியைப் பெற்று பொது இடங்களில் பயன்பாட்டுக்கு வரும்.
இது செயல்பாட்டுக்கு வரும்போது பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் அமர் வதற்காகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், பயணிகளுக்கு முழு வசதியும் கிடைக்கும். இதை அமைக்க ரூ.2 லட்சம் செலவாகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment