Published : 02 Aug 2022 09:05 AM
Last Updated : 02 Aug 2022 09:05 AM
ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணிக்கு 101 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 102 அடியை எட்டியவுடன், பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படவுள்ளது. எனவே, கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 2,817 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடியும், பவானி ஆற்றில் 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடியும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT