Published : 01 Aug 2022 11:56 AM
Last Updated : 01 Aug 2022 11:56 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள்: ஆக.7-இல் திமுக சார்பில் அமைதிப் பேரணி

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுக வெளியிடப்பட்டுள்ள செய்தி: "அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அவரது 4வது நினைவுநாளினையொட்டி தமிழக முதல்வர், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”, ஆகஸ்ட் - 7, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர், கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்- முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி,
மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, உள்ளிட்ட பல்வேறு அணியினரும், கருணாநிதியின்ன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வரவேண்டுமென சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x