Published : 30 Sep 2016 12:46 PM
Last Updated : 30 Sep 2016 12:46 PM
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நகர்மன்ற தலைவர்வேட்பாளரை எதிர்த்து, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் தொகுதிச் செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சுயேட்சையாக களம் இறங்கி, வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறையும் அதிமுக சார்பில் இருவரும் களம் இறக்கிவிடப் பட்டுள்ளதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என அக்கட்சி யினர் தெரிவிக்கின்றனர்.
குமாரபாளையம் அதிமுக நகரச் செயலாளராக நாகராஜ் உள்ளார். அதுபோல், கடந்த உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் குமாரபாளையம் தொகுதிச் செயலாளராக தனசேகரன் இருந்தார். இருவரும் கட்சியின் மாவட்ட செயலாளரான தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணியின் ஆதரவாளர்கள். இருவரும் கடந்த உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித் தனர். இருவரும் செல்வாக்கு மிகுந்தவர்கள் என்பதால் யாருக்கு நகர்மன்ற தலைவர் ‘சீட்’ ஒதுக்கு வது என்பதில் இழுபறி இருந்தது. இருவரிடமும் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியைக் கண்டதுடன், நகர்மன்ற தலைவர் ‘சீட்’ பெறுவதில் இருவரிடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத் தில் கட்சியின் நகரச் செயலாளரான நாகராஜ், குமாரபாளையம் அதிமுக நகர்மன்ற தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதில் கடும் அதிருப்தியடைந்த தொகுதிச் செயலாளராக இருந்த தனசேகரன் நகர்மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக களம் இறங்கினார். அவர் மட்டுமின்றி தனது ஆதரவாளர்களையும் நகராட்சியின் 33 வார்டுகளிலும் சுயேட்சையாக களம் இறக்கினார். அதனால், அதிமுக, திமுகவுக்கு இடையே என வழக்கமாக இருக்கும் நேரடி போட்டி நேர்மாறாக அமைந்தது. அதன்படி அதிமுக மற்றும் சயேட்சையாக களம் இறங்கிய தனசேகரன் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் சுயேட்சையாக களம் இறங்கிய தனசேகரன் வெற்றிபெற்ற துடன், சுயேட்சையாக களம் இறக்கப் பட்ட அவரது ஆதரவாளர்கள் பெரும்பான்மையான இடங் களை கைப்பற்றினர். ஆளுங்கட்சி அதிகாரப்பூர்வ நகர்மன்ற வேட் பாளர் நாகராஜ் மட்டுமின்றி அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களும் தோல்வியை தழுவினர். இது கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இம்முறை குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அதனால் நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் நகரச் செயலாளராக இருக்கும் நாகராஜ், தற்போதைய நகர்மன்ற தலைவர் தனசேகரன் ஆகியோர் தேர்தலில் களம் இறங்க முயற்சித்தனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் இருவரும் தேர்தலில் போட்டியிட களம் இறக்கிவிடப்பட்டுள்ளதால், கடந்த உள்ளாட்சித் தேர்தலைப் போல் இந்த தேர்தலிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேவேளை யில், இம்முறை நகர்மன்றத் தலைவர் பதவி மறைமுக தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால், தேர்தல் ‘உள்குத்து’ வேலைகளுக்கும் பஞ்சமிருக்காது எனவும், அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT