Published : 27 Jul 2022 04:25 AM
Last Updated : 27 Jul 2022 04:25 AM

வெம்பக்கோட்டை அகழாய்வில் கற்கால கருவிகள் கண்டெடுப்பு

சிவகாசி

சிவகாசி அருகே விஜயகரிசல் குளம் வைப்பாற்றங்கரையில் நடக்கும் அகழாய்வில் இரு கற்கால கருவிகள் கண்டெடுக் கப்பட்டன.

வெம்பக்கோட்டை வைப்பாற் றின் வடகரையில் உள்ள விஜயகரிசல்குளத்தில் மார்ச் மாதம் முதல் நடக்கும் அகழாய்வு பணியில் பகடைக்காய், முத்து, டெரகோட்டா விளையாட்டு பொருட்கள், தந்தத்தால் ஆன அணிகலன்கள், சுடுமண் குவளை, புகைபிடிப்பான் , அகல் விளக்கு, கற்களால் ஆன சுவர், திமிலுடன் கூடிய காளை உருவங்கள், பெண் சிற்பங்கள் எனப் பல வகையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

10-வது குழியில் நடக்கும் அகழாய்வில் கல்லால் ஆன கோடாரி கண்டெடுக்கப்பட் டுள்ளது. இரு கோடாரிகளில் ஒன்று பாதி உடைந்த நிலையிலும், மற்றொன்று முழுவதுமாக கிடைத்துள்ளது. இதை மரங்கள் வெட்டவும், வேட்டையாடுவதற்கும் பழங்கால மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இதன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச் சமூகம் நாகரிக வளர்ச்சி அடைந்து இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x