Last Updated : 30 Sep, 2016 12:45 PM

 

Published : 30 Sep 2016 12:45 PM
Last Updated : 30 Sep 2016 12:45 PM

அதிக மதுபானம் விற்கும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க குழுக்கள்: தேர்தல் பிரிவு ஏற்பாடு?

உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியதையொட்டி அதிக மதுபான வகைகள் விற்கும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே அதிமுக சார்பில், மாநகராட்சி, ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டனர்.

திமுக, காங்கிரஸ், தாமக, தேமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களின் பட்டியலை அடுத்தடுத்து அறிவிக்க தொடங்கவிட்டன. அனைத்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பின ருக்கான வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கி ன்றனர். மாநகராட்சி, கிராம ஊராட்சி களில் தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியது.

அந்தந்த வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் மும்மரம் காட்டி வருகின்றனர். உறவினர், நண்பர்களின் குடும்பங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம்

வேட்பு மனுக்கள் தாக் கல்,வாக்கு சேகரிப்பில் மும் மரம் காட்டுவதால் தினமும் காலை நேரங்களில் கிராமபுற டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைகளில், ஓட்டல்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலை மோதுகிறது. சுவரொட்டி, சுவரில் சின்னம் வரைதல் போன்ற தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடை களில் கடந்த வாரத்தைவிட மதுபான விற்பனை அதிகரிக்க துவங்கி இருப்பதாக கூறப் படுகிறது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி போன்ற சில முக்கிய தினங்களில் மதுபானங்கள் விற்பனை சற்று அதிகரிக்கும். திருவிழா காலங்களிலும் குறிப்பிட்ட கடைகளில் விற்பனை கூடும். தேர்தல் நேரத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், அது பற்றி எதுவும் ஆய்வு செய்யமுடியாது. விற்பனை பற்றி எவ்வித இலக்கும் நிர்யிணக்க முடியாது.

தேர்தல் நேரத்தில் வழக் கத்தைவிட கூடுதலாக மதுபானம் விற்கும் கடைகளை கண்காணிக்கப்படுவது வழக்கம். இதற்கான குழுக்களை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், நியமிக்கப்படும். அதிகமாக மதுபானம் விற்கும் கடைகள் உள்ள பகுதியில் பணப்புழக்கம் அதிகமிருப்பதை அறிந்து, அதற்கான நடவடிக்கையை தேர்தல் அதிகாரிகள் மேற் கொள்வர். விற்பனை பற்றி வழக்கமாக ஆய்வு செய்வோம். தேர்தல் அறிவிப்பிற்கு பின் இன்னும் ஆய்வு செய்யவில்லை. இனிமேல் கணக்கெடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x