Published : 29 Sep 2016 08:42 AM
Last Updated : 29 Sep 2016 08:42 AM

ஆர்.கே.நகர் தொகுதி 42-வது வார்டில் மழைநீர் வடிகால் இல்லாததால் மக்கள் அவதி

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 42-வது வார்டில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதி இல்லாததால், சிறு மழைக்கே வெள்ளம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

சென்னை மாநகராட்சி தண்டை யார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 42-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் வீராகுட்டி தெரு, மேயர் பாசுதேவ் தெரு என பல்வேறு தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளம், தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சிறு மழைக்கே வெள்ளக் காடாக மாறிவிடுகிறது. இப்பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. ஆனால் மழைநீர் வாய்க்கால் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சிறு மழை பெய்தாலும், இப்பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.

வெள்ளம் தேங்கும்போது, அங் குள்ள கழிவுநீர், வெள்ள நீரில் கலந்து, துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடுகிறது. இப்பிரச்சினை இங்கு தொடர் கதை யாக இருந்து வருகிறது. இப்பகுதி முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில்தான் வருகிறது. இருந்தாலும் இங்கு வெள்ளம் ஏற்படு வதை தடுக்க, மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. மேலும் இப் பகுதியில் உள்ள குடிநீர் வாரிய குழாயில் அடிக்கடி கழிவுநீர் கலந்து வருகிறது. குடிநீர் வாரியத்துக்கு புகார் தெரிவித்தால், லாரியில் குடிநீர் அனுப்பு கிறார்கள். ஆனால் இலவச குடிநீரை, லாரி ஓட்டுநர்கள் கட்டணத்துக்குத்தான் கொடுக்கிறார்கள். இங்குள்ள குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படும் குடிநீர் போதுமாக இல்லை. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக மாநகாரட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, “அப்பகுதியில் குறுகலான தெருக்கள் அதிகம் உள்ளன. மழைநீர் கட்டமைப்பு அமைக்க வேண்டுமென்றால், அந்த தெருக்களின் இருபுறங்களிலும் தலா 4 அடி அகலத்துக்கு கட்டுமானம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், தெரு இல்லாமல் போய்விடும். அதனால் அனைத்து தெருக்களிலும் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தாமல், அந்தந்த தெருக்களில் இருந்து மழைநீர் வடியும் தாழ்வான பகுதிகளில் மட்டும் மழை நீர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x