Published : 02 Apr 2014 10:50 AM
Last Updated : 02 Apr 2014 10:50 AM
விருதுநகரில் மதிமுக வேட்பாளர் வைகோ சாலை மறியல் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, பறக்கும் படை எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ, பிரச்சாரம் செய்வதற்காக திங்கள் கிழமை அருப்புக்கோட்டை சென்றார். அவருடன் கட்சியினரும் அடுத்தடுத்த வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர். விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் பெரிய வள்ளிகுளம் அருகே காமராஜர் மணிமண்டபத்தின் சமீபம் சென்றபோது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் வைகோ சென்ற வாகனத்தின் பின்னால் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதிலிருந்தவர்களை பறக்கும் படை எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் ஒருமையில் பேசியதாகக் கூறி வைகோ சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதனால், விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவைத் தொடர்ந்து, பறக்கும் படை எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைப் பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT