Published : 30 Sep 2016 09:58 AM
Last Updated : 30 Sep 2016 09:58 AM
சமீப காலமாக பேருந்து விபத்துகளால் பயணிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வரும் சூழலில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கால் மேல் கால் போட்டபடி அலட்சிய மனநிலையுடன் நேற்று பேருந்தை இயக்கிய சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தருமபுரி செல்லும் அரசுப் பேருந்து எண்: டிஎன் 29 என் 2694. இந்த பேருந் தின் ஓட்டுநர் நேற்று கிருஷ்ண கிரி - தருமபுரி இடையிலான பயணத்தின்போது உச்சகட்ட அலட்சியத்துடன் பேருந்தை இயக் கியது பயணிகள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இது பற்றி பேருந்தில் பயணித்த ‘தி இந்து’ வாசகர் ஒருவர் கூறிய தாவது:
ஓட்டுநர்கள் தங்கள் இடது காலை கிளட்ச் பிரயோகத்துக்கும், வலது காலை ஆக்ஸிலேட்டர் மற்றும் பிரேக் ஆகிய இரண்டின் பிரயோகத்துக்கும் பயன்படுத்து வதுதான் நடைமுறை. ஆனால், இந்த பேருந்தின் ஓட்டுநர் தனது வலது காலை தூக்கி மற்றொரு கால் தொடையின் மீது போட்டுக் கொண்டார். பின்னர் வலது பக்க மாக சற்றே பக்கவாட்டில் திரும்பி அமர்ந்து இடது கால் மூலம் ஆக்ஸிலேட்டரை மிதித்தபடி சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை இயக்கினார். ஓர் ஓட்டுநர் என்ற முறையில், இந்த செயல் என் பார்வையில் உச்சகட்ட அலட்சியமாகப்பட்டது. இதைக் கண்ட சக பயணிகள் சிலர் பதற்றத்துடனேயே பயணத்தை மேற்கொண்டனர்.
பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்த நிலையில் அவர்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஓட்டுநர் இவ்வாறு பேருந்தை இயக்கியது பொறுப்பற்ற செயல். சமீப காலமாக அடிக்கடி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கிய சம்பவங்களில் பலர் உயிரிழந்தது இந்த ஓட்டுநர் மனதை சிறிதும் பாதித்ததாகவே தெரியவில்லை.
போக்குவரத்துக் கழக நிர் வாகத்தின் கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சியளிப்பு போதிய அளவில் இல்லாததாலே சில ஓட்டுநர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT