Published : 24 Jul 2022 07:41 PM
Last Updated : 24 Jul 2022 07:41 PM
திட்டக்குடி: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுத தாமதாமாக வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் காவலர்கள் அனுமதி மறுத்ததால், மிகவும் ஆதங்கத்தோடு தேர்வெழுத முடியாமல் அங்கிருந்து திரும்பினர்.
தமிழ்நாடு தேர்வாணையத்தால் நேற்று நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.30 வரை நடைபெறும் எனவும் தேர்வர்கள், தேர்வு மையத்தில் 9 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி தேர்வுக்கு தயரான தேர்வர்களில் சிலர் 9 மணிக்கு பின் அதாவது 9.05 மணிக்கு வந்தபோது, அவர்களை உள்ளே விட காவலர்கள் அனுமதி மறுத்தனர்.
விழுப்புரம் மாதாகோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு 9.05 மணிக்கு வந்த தேர்வர்கள் 10 பேர், தங்களை அனுமதிக்கக் கோரி, காவலர்களிடம் கோரினர். ஆனால் அவர்கள் மறுத்த நிலையில், வளவனூரைச் சேர்ந்த பிரியா என்ற தேர்வர், தேர்வு மையத்தின் வாயில் கதவைத் தட்டி திறக்கக் கோரினார். பின்னர் ''உங்கள் பிள்ளைகளும் இதுபோன்று தேர்வு எழுதவந்தால் உதவி செய்யமாட்டீர்களா'' எனவும் ஆதங்கத்தோடு கேட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேபோன்று, கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 320 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் 80 பேர் தேர்வு எழுத வரவில்லை காலை 9மணிக்கு பள்ளி பிரதான வாயிலை பள்ளி நிர்வாகம் மூடியுள்ளது.
காலதாமதமாக தேர்வெழத 20-க்கும் மேற்பட்டோர் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் பள்ளியின் உள்ளே இருந்து வந்த திட்டக்குடி சமூக நல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்திய போது தேர்வு எழுத வந்தவர்கள் வட்டாட்சியரிடம் தேர்வு மையம் நடைபெறும் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதிக தூரம் இருக்கிறதாகவும் மற்றும் பேருந்து நிறுத்தம் வசதி இல்லாத பள்ளிக்கு எப்படி குறித்த நேரத்தில் வர இயலும். ஐந்து நிமிடம் லேட்டா வந்தாலும் உள்ளே விட மறுத்ததது ஏன் எனக் கேட்டு தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்ப இடத்திற்கு வந்த திட்டக்குடி துணை கண்காணிப்பாளர் (பொருப்பு) அசோகன் தேர்வு எழுத வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அதிகாரிகளிடம் செல் போனில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு தேர்வு எழுத வந்தவர்களிடம் அரசு அறிவித்த நேரத்திற்குள் உள்ளே வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கூறி அவர்களை அங்கிருந்து அனுப்ப முயற்சித்தார். தேர்வு எழுத கால தாமதமாக வந்தவர்கள் 20கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்திற்கு வெளியே மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர் இதனால் பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT