Last Updated : 24 Jul, 2022 05:24 PM

 

Published : 24 Jul 2022 05:24 PM
Last Updated : 24 Jul 2022 05:24 PM

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்தது

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது. இதனால் 16 கண் மதகுகளை தொட்டு ததும்பி நிற்கும் தண்ணீர். 

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 30 ஆயிரத்து 723 கன அடி நீர் வரத்து சரிந்துள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் நீர் வரத்து விநாடிக்கு 35 ஆயிரத்து 237 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 30 ஆயிரத்து 723 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.

அணையின் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி என விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.24 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.85 டிஎம்சி-யாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x