Published : 09 Jun 2014 10:05 AM
Last Updated : 09 Jun 2014 10:05 AM

தருமபுரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் ஏரியில் மூழ்கி பலி

தருமபுரி அடுத்த காரிமங்கலம் அருகே குளிக்கச் சென்ற 4 குழந் தைகள் ஏரியில் மூழ்கி இறந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொம்மஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஒசஹள்ளி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக உள்ளார். இவரது குழந் தைகள் நிவேதிதா (7), குருசரண் (5). முருகனின் சகோதரர் வடிவேல். விவசாயி. இவரது குழந்தைகள் கார்த்திக் (4), சுமித்ரா (3). முருகனின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். வடிவேலுவின் குழந்தைகள் பால் வாடி மையத்தில் படித்து வந்தனர்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை மாலை குழந்தைகள் 4 பேரும் வீட்டின் அருகே விளை யாடிக் கொண்டிருந்தனர். வீட்டில் இருந்து சற்று தொலைவில் ஒசஹள்ளி ஏரி உள்ளது. அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் ஏரியில் குளிக்க முயன்றுள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையில் ஏரியில் சில பகுதிகளில் குட்டை போல் நீர் தேங்கி நின்றுள்ளது.

அதில் இறங்கி குளிக்க முயன்ற குழந்தைகள் 4 பேரும் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரம் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஏரிக்கரை பகுதியில் குழந்தைகளின் ஆடைகள் மட்டும் இருந்துள்ளது.

எனவே சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் குட்டை நீரில் தேடியபோது குழந்தைகள் 4 பேரின் சடலமும் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது. தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் குழந்தைகளின் சடலத்தை தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் ஏரி நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தால் ஒசஹள்ளி கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x