Last Updated : 28 May, 2016 10:05 AM

Published : 28 May 2016 10:05 AM
Last Updated : 28 May 2016 10:05 AM

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க இந்திய பருத்திக் கழகம் தமிழகத்தில் கொள்முதல் செய்யுமா?

தமிழகத்தில் விளையும் பருத்தியை கொள்முதல் செய்ய இந்திய பருத்திக் கழகம் முன்வர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் பருத்தி சாகுபடி இரண்டு கட்டங்களாக மேற்கொள் ளப்படுகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர், டிசம்பரில் விதைக்கப்பட்டு ஜனவரி- பிப்ரவரியில் பஞ்சு விற்பனை செய்யப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய பகுதிகளில் பிப்ரவரியில் விதை ஊன்றி மே, ஜூன் மாதங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நெல், கரும்பு ஆகிய பயிர்களுக்கு மாற்றாக சாகுபடி செய்யப்படும் பருத்தி, தனியார் வியாபாரிகளிடமும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள, கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பருத்திக் கழகம் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பஞ்சு கொள் முதல் செய்வதை தவிர்த்து வரு கிறது. அதேநேரத்தில், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

தமிழக விவசாயிகளை வஞ்சிக் கும் வகையில் இந்திய பருத்திக் கழகம் செயல்படுவதாகவும், அத னால்தான் தமிழகத்தில் உள்ள தனியார் வியாபாரிகள் சிண்டி கேட் அமைத்து பருத்தி பஞ்சுக் கான விலையை குறைத்து வாங்கு வதாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இதுகுறித்து பருத்தி வியாபாரி செம்பனார்கோயில் கலியமூர்த்தி கூறியபோது, “பருத்தி விவசாயிகள் பலர் உள்ளூர் வியாபாரிகளிடம் அவ்வப்போது பணத்தை பெற்றுக்கொண்டு, பஞ்சை கொடுத்துவிடுகின்றனர். ஒருசில விவசாயிகள்தான் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். தற்போது வியாபாரிகள் கிலோ ரூ.40 முதல் ரூ.43 வரை கொள்முதல் செய்கின்றனர். டெல்டா மாவட்டங் களில் ஜூன் முதல் வாரம் பருத்தி ஏலம் தொடங்க உள்ளது. விவசாயி களுக்கு நியாயமான விலை கிடைக்காத நிலை உள்ளதால், தமிழகத்தில் இந்திய பருத்திக் கழகமும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

இதுதொடர்பாக கோவையில் உள்ள இந்திய பருத்திக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தியாவின் பருத்திப் பஞ்சு தேவை என்பது ஆண்டுக்கு 120 லட்சம் டன் என்ற நிலையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்தான் கிடைக்கிறது. எனவேதான் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. இந்த மாநிலங் களில் பஞ்சின் தரம் அதிகம், குறைந்த வாடகைக்கு அங்கு சேமிப்புக் கிடங்குகளும் கிடைக்கின் றன என்பதால்தான் பிற மாநிலங் களில் கொள்முதல் செய்கிறோம்.

பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழக பருத்தியின் தரம் குறைவாக இருப்பதாக பல இடங்களிலிருந்து புகார்கள் வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பருத்தி ஏலம் நடைபெறும் இடங்களில் பஞ்சின் தரத்தைப் பார்வையிட்டு வருகிறோம். தமிழகத்திலும் நேரடி கொள்முதலில் ஈடுபடலாமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x