Last Updated : 22 Jul, 2022 02:32 PM

 

Published : 22 Jul 2022 02:32 PM
Last Updated : 22 Jul 2022 02:32 PM

புதுச்சேரியில் அங்கன்வாடி, பாண்லே பால் பூத் மூலம் தேசியக் கொடி விற்பனை: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: “வீடுதோறும் கொடியேற்ற அங்கன்வாடி, பாண்லே பால் பூத் மூலம் தேசியக் கொடி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேயில் ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை அரசு அலுவலகம், வீடுகளில் கொடியேற்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான துண்டு பிரசுரங்களை முதல்வர் ரங்கசாமி இன்று அவரின் அறையில் வெளியிட்டார்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "மக்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்ட நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகள் நடக்கிறது. இளையோருக்கு தேசபற்று உருவாக வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். புதுச்சேரி அரசும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றி வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பறக்க வேண்டும்.

இதை செயல்படுத்த பல துறைகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் 3.2 லட்சம் வீடுகள் உள்ளன. அதற்குரிய தேசியக் கொடியை கொள்முதல் செய்து அங்கன்வாடி, பாண்லே பாலகங்கள் ஆகியவற்றின் வாயிலாக குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொருவரும் தேசியக்கொடியை விலை கொடுத்து வாங்கி வீட்டில் ஏற்றவேண்டும்.

தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்ற செய்தி மக்களிடம் சென்றடைய புதுவையில் ஆயிரத்து 80 இடங்களில் 62 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொருவரும் மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்றி வைக்கவேண்டும். பஸ்களில் வண்ணங்களையும் தீட்ட உள்ளோம்.காசு கொடுத்து வாங்கி கொடி ஏற்றினால் பற்று அதிகம்" என்று ரங்கசாமி கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலர்கள் உதயகுமார், நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x