Published : 21 Jul 2022 07:03 PM
Last Updated : 21 Jul 2022 07:03 PM
திருவிடைமருதூர் : கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் இருவரது சடலங்கள் மயிலாடுதுறை அருகே இரு வேறு இடங்களில் மீட்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் பந்த நல்லூர் அருகேயுள்ள மதகு சாலை கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்குமார்(24), அப்பு என்ற ராஜேஷ்(22), ஆகாஷ் (24),ன்கொளஞ்சிநாதன் (34) ஆகிய 4 பேர் ஜுலை 18-ம் தேதி இரவு மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆற்றில் 4 பேரும் தண்ணீரில் சிக்கிக் கொண்ட நிலையில், தகவல றிந்து வந்த மீட்புக் குழுவினரால் கொளஞ்சிநாதன் மட்டும் மீட்கப் பட்டார். மற்ற 3 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகேயுள்ள புரசங் காடு பகுதியில் மனோஜ் குமார் சடலமும், முடிகொண்ட நல்லூர் பகுதியில் ஆகாஷ் சடலமும் மீட்கப்பட்டது. நீர் வரத்து அதிகரித்ததால் தொடர்ந்து, மனோஜ்குமார், ஆகாஷ் சடலங்கள் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன. தொடர்ந்து ராஜேஷை தேடி வருகின்றனர்.
அமைச்சர் ஆறுதல்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, கொள்ளிடம் ஆற்றில் தேடி வரும் பணியினை பார்வையிட்டனர்.
பின்னர் இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்,கொளஞ்சிநாதனை, சந்தித்து ஆறுதல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT