Published : 19 Jul 2022 08:14 PM
Last Updated : 19 Jul 2022 08:14 PM
சென்னை: மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயர்த்தவும், சிறு மற்றும் குறு தொழில் மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தவும், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தவும்,
ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் உயர்த்தவும் உத்தேசித்துள்ளதாக நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் செயலாகும்.
இந்த மின்கட்டண உயர்வு முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை அஇஅதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தப் பதிவில் கூறப்பப்பட்டள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயர்த்தவும், சிறு மற்றும் குறு தொழில் மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தவும், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தவும்,
— O Panneerselvam (@OfficeOfOPS) July 19, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT