Published : 18 Jul 2022 07:21 PM
Last Updated : 18 Jul 2022 07:21 PM

தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்: எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? - முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார். பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது:

தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

முழு விவரம்:

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

“ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு” என்ற திட்டம் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும். ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு உத்தேச பட்டியல் அளிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலுக்குப் பிறகே கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயரும் மின் கட்டணம் உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மின்சார கட்டணம் எப்படி, எவ்வாறு உயர்த்தப்படவுள்ளது என்பதன் முழு விவரம்:

  • தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வவோர்களுக்கு (42.19 சதவீதம் ) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
  • அதனத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்
  • குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • 2 மாதங்களுக்கு 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.27.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.72.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.297.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.155 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.395 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.565 உயர்த்த பரிசீலனை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x