Published : 18 Jul 2022 08:42 PM
Last Updated : 18 Jul 2022 08:42 PM
சென்னை: தி.நகர் பாண்டி பஜாரை போன்று சென்னையில் மேலும் 2 சாலைகளை மறு வடிவமைப்பு செய்து சென்னை மாநகராட்சியின் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக தி.நகரில் பொதுமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சைக்கிள் பாதை அமைக்கவும் முக்கியதுவம் அளிக்கப்படவுள்ளது.
இதன்படி இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து கொள்கையை சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி சென்னையில் உள்ள 111 கிலோ மீட்டர் நீள சாலைகளை மறுவடிமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. மேலும், இது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்றது.
இந்நிலையில், இவற்றில் 2 சாலைகள் முதல் கட்டமாக மறு வடிவமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி ராயபுரம் மண்டலம் 51 வது வார்டில் உள்ள எம்சி சாலை, தேனாம்பேட்டை மண்டலத்தில் 111 வார்டில் உள்ள காதர் நவாஸ் சாலை உள்ளிட்ட இடங்களை மறு வடிவமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்த சாலைகள் தி.நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் போன்று மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இவற்றில் ஏதாவது ஒரு சாலையில் முழுவதும் மேட்டார் வாகன போக்குவரத்து இல்லாமல் சைக்கள், நடந்து செல்பவர்கள் செல்லும் வகையிலான சாலையாக மாற்றவும் சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT