Published : 26 Jun 2014 09:58 AM
Last Updated : 26 Jun 2014 09:58 AM
தமிழகத்தில் மணல் விற்பனையை முறைப்படுத்த தனி வாரியம் அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்க லான மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை யைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டு களாக மணல் கொள்ளை அதிகரித்து வந்துள்ளது. கட்டுமானப் பணிக்காக ஆற்று மணலின் தேவையும் அதிகரித் துள்ளது. இதைப் பயன்படுத்தி அரசியல் வாதிகளுடன் சேர்ந்து அதிகாரிகளும் இயற்கை வளத்தை சுரண்டுகின்றனர்.
2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை மணல் குவாரிகள் தனியார் வசம் இருந்தன. அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததால், 2003 முதல் மணல் குவாரிகளை அரசே நடத்துகிறது. இப்போதும் முறைகேடுகள் நடந்து வருகின்றன.
மணல் குவாரி முறைகேடுகளால் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள் ளது. மூன்றரை யூனிட் கொண்ட ஒரு லாரி மணல், வாடகை, உள்ளிட்ட செலவுகளைச் சேர்த்து ரூ. 2450 என அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் ரூ. 7500 வரை விற்கின்றனர். 200 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இந்த விலை உயர்வின் மூலம் ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரத்து 500 கோடி வரையில் முறைகேடாக வருமானம் பெறுகின்றனர்.
எனவே, மணல் விற்பனையை முறைப்படுத்த 2003-ம் ஆண்டின் நிபுணர் குழு அறிக்கைப்படி மணல் வாரியம் அமைக்க வேண்டும். சாக்கு மற்றும் கோணிப் பையில் மணலை அடைத்து விலை விவரங்களை அச் சிட்டு கடைகளில் அரசே மணல் விற் பனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி. ராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வாரியம் அமைப்பது மாநில அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT