Published : 16 May 2016 01:07 PM
Last Updated : 16 May 2016 01:07 PM
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த கையோடு பெரும்பாலானோர், செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் >#TNVotes ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் இதில் பதியப்பட்டு வருகின்றன.
இதில் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகத்தினரும் வாக்களித்த புகைப்படங்கள் உலா வருகின்றன. அத்தோடு முதல் முறை வாக்காளர்களான இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்களித்த புகைப்படங்களும் உள்ளன.
தேர்தல், வாக்களிப்பது, புகைப்படம் எடுப்பது தொடர்பான மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன. அதைத் தவிர மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் ஓட்டு போடும் படங்களும் பிரபலமாகி வருகின்றன.
95 வயது மூதாட்டி பரமாத்தாள், மண உடையோடு வந்து வாக்களிக்கும் மணப்பெண் ஆகியோரின் படங்களும் அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT