Published : 03 May 2016 10:00 AM
Last Updated : 03 May 2016 10:00 AM
தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் 6.47 லட்சம் பேர் காஸ் சிலிண்ட ருக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதில் தென் னிந்தியாவில் தமிழகம் 2-ம் இடத் தைப் பிடித்துள்ளது.
சமையல் காஸ் சிலிண்டரை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. சிலிண்டர் விலையில் மானியத் தொகையை கழித்து வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப் பட்டு வந்தன. இதில் பல மோசடி கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்ததும் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானி யத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி காஸ் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் சந்தை விலை யில் வாங்கிக்கொள்ள வேண் டும். அதற்கான மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரத்தை சம்பந்தப்பட்ட காஸ் சிலிண்டர் ஏஜென்சியிடம் தெரி விக்குமாறு கூறப்பட்டது. இதைய டுத்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே வசதி படைத்தோர் மானியத் தொகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சா ரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தொடங்கியது. பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில், ‘மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் கோரிக்கைவிடுத்து வருகிறார்.
இதன்படி தென் மாநிலங்களில் கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 6.47 லட்சம் பேர் மானியத் தொகையை விட்டுக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதி காரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
நாட்டில் 15.34 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் 22.11 லட்சம் பேர் மானியத்தை விட்டுக்கொடுத் துள்ளனர். இதில், கர்நாடக மாநிலத் தில் 6.96 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதன் மூலம் அம்மாநிலம் முதலிடத்தைப் பிடித் துள்ளது. அடுத்தபடியாக தமிழகத் தில் 6.47 லட்சம் பேர் மானியத் தொகையை விட்டுக் கொடுத்து 2-ம் இடம் பிடித்துள்ளது. தெலங்கானா வில் 3.47 லட்சம் பேரும், கேரளாவில் 2.83 லட்சமும், ஆந்திராவில் 2.36 லட்சம் பேரும் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் சேமிப்பாக கிடைத்துள்ளது.
இவர்கள் விட்டுக் கொடுத்த மானியத்தொகை கிராமப் புறங் களில் சமையலுக்கு விறகுகளை பயன்படுத்தும் ஏழைகளின் வீடு களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்க பயன் படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT