Published : 03 May 2016 09:32 AM
Last Updated : 03 May 2016 09:32 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - காமராஜர் சொன்னதால் களத்துக்கு வந்தேன்: பழசை அசைபோடும் என்.எஸ்.வி. சித்தன்

இப்போதெல்லாம் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி மட்டுமே ஜெயிக்கும். ஆனால், 1967-ல் திருமங்கலம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக நின்று வெற்றி சரித்திரத்தை எழுதியவர் இப்போதைய தமாகாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் என்.எஸ்.வி.சித்தன்.

இன்றைக்கும் திருமங்கலத்தை மையப்படுத்தியே அரசியல் செய்து வரும் அவரிடம் அந்தக் காலத்து தேர்தல் அனுபவத்தைப் பற்றிக் கேட்டதுமே உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

“1967 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. திருமங்கலத்தில் வேட்பாளர் இறந்ததால் ஒரு மாதம் தாமதமாக தேர்தல். சுதந்திரா கட்சியை எதிர்த்து நிற்க, 32 வய தான என்னைக் கொண்டுபோய் காமராஜரிடம் நிறுத்தினார்கள். நான் சற்று தயங்கினேன். ‘தியாகம்னா என்னன்னு தெரியுமான்னே.. ஒட்டு மொத்தமா காங்கிரஸ் கட்சி தோத் துப்போனப் பின்னாடி காங்கிரஸ் வேட்பாளரா நிக்கிறது தான் தியாகம்னே.. அந்தத் தியாகத்த தியாகியோட மகன் நீதான் செய் யணும்னே..’ன்னு காமராஜரே சொன் னதும் தைரியமா களத்துல இறங்கிட்டேன்.

இப்ப மாதிரி எல்லாம் அப்ப செலவு கெடையாது. அந்த தேர் தல்ல எனக்கு மொத்தமே 15 ஆயிரம் ரூபாய்க்குள்ள தான் செலவாகிருக்கும். வாக்குச் சாவடிச் செலவுகளுக்காக எங்காளுங்க இழுத்துப் புடிச்சி முந்நூறு முந்நூத் தம்பது குடுப்பாங்க. டீ, காபி வாங்கவும் வெத்தல பாக்கு வாங்கி வைக்கவும் இந்தக் காச வைச்சுக்குவாங்க. பெரும்பாலான ஊருக்காரங்க அவங்களே இந்தச் செலவையும் பாத்துக்குவாங்க.

நானும் என்னோட நண்பர்கள் நாலைஞ்சு பேரும் காலையிலயே எங்க வீட்டுலருந்து சோத்தைக் கட்டிக் கிட்டு ஓட்டுக் கேட்டு கெளம்பிரு வோம். தொகுதியில இருக்கிற அத்தனை வீட்டுப் படியும் ஏறி இறங்கி ஓட்டுக் கேட்டுருக்கோம். அந்தத் தேர்தல்ல சுமார் ரெண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்துல என் னைய ஜெயிக்க வைச்சாங்க. சட்டப் பேரைவையில் அஞ்சு வருசத்துல 7,000 கேள்விகளை கேட்க முடிஞ் சுது. இப்ப அப்படி யாராச்சும் கேட்கமுடியுமா? அப்ப, நல்லவங்கள தேர்வு செய்யணும்னு மக்கள் நினைச்சாங்க; நம்ம ஜெயிக்கணும்னு கட்சிக்காரங்கக்கிட்டயும் ஒரு வெறி இருந்துச்சு. திராவிடக் கட்சிகள் தலையெடுக்க ஆரம்பிச்சதும் எல்லாமே வணிக மயமா மாறிடுச்சு.

பதவிக்கு வந்தா பணம் சம்பாதிக்கலாம்னு அரசியல் வாதிங்க நினைக்கிறாங்க. சம்பாதிச்சு வைச்சிருக்கறதுல நமக்கும் கொஞ்சம் குடுக்கட்டுமேன்னு மக்களும் நினைக்கிறாங்க. நான், பதவியை வச்சு சம்பாதிக்க நினைக்கிறதும் இல்லை; ஓட்டுக்கு காசு குடுக்குறதும் இல்லை. அதனால என்னைய நான் யோக்கி யன்னு சொல்லிக்கிட்டு இருக்கி றேன். ஆனா மக்கள், ‘எனது நேர் மையை கொச்சைப்படுத் துறாங்க.

உண்மையான உழைப்புக்கும் நேர்மையான நடத் தைக்கும் வேலை இல்லாம போச்சு. இதையெல்லாம் பார்க்கிறப்ப பல நேரங்கள்ல, ஏண்டா இந்த அரசியலுக்கு வந்தோம்னு மனச் சோர்வு அடைஞ்சிருக்கேன்; வருந்தி இருக்கிறேன். ஏன், கண் கலங்கியதுகூட உண்டு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x