Last Updated : 06 May, 2016 08:16 AM

 

Published : 06 May 2016 08:16 AM
Last Updated : 06 May 2016 08:16 AM

சரத்குமார் - அனிதா கடும் போட்டி

திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சமக தலைவர் ஆர்.சரத்குமாருக்கும், திமுகவின் அனிதா ஆர்.ராதாகிருஷ் ணனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் கிரா மம், கிராமமாக வாக்கு சேகரிக்கின்றனர். முன்னணி நடிகர், நடிகையாக இருப்பதால் அவர்களது பிரச்சாரம் மக்களைக் கவர்ந்து வருகிறது.

திமுக சார்பில் பலம் பொருந்திய வேட்பாளராக களத்தில் இருக்கிறார் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். 2009 இடைத்தேர்தலையும் சேர்த்து தொடர்ச்சியாக 4 முறை இத்தொகுதியில் வென்றுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் எஸ்.ஏ.செந்தில்குமார், பாஜக வேட்பாளர் வே.ஜெயராமன் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாமக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் உஜ்ஜல்சிங் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு, மாற்று வேட்பாளராக மனு செய்த தே.குமரகுருப ஆதித்தன் வேட்பாளராகியுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.குளோரியானும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் சரத்குமார்- அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x