Published : 10 Jul 2022 12:27 PM
Last Updated : 10 Jul 2022 12:27 PM
சென்னை: அரசுப் பள்ளியில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
இதன்படி மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று கடந்த ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள் அகும். எனவே தகுதி உள்ள மாணவிகள் இன்று இரவுக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT