Published : 19 Jun 2014 10:09 AM
Last Updated : 19 Jun 2014 10:09 AM

பொறியியல் பாடங்களை தாய்மொழியில் படிக்க 4 மொழிகளில் 700 பாடங்கள்: இணையதளத்தில் வெளியிட திட்டம்

பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழி களில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது. முதல்கட்டமாக, தமிழில் ஒரு பாடத்திற்கான பணி தொடங்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் உயர் கல்வி துறையில் பொறியியல் கல்லூரி களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இதையொட்டி, பொறி யியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்துவதுதான் தற்போது பெரிய சவாலாக இருக் கிறது. பொறியியல் படிக்கும் மாணவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரி படிக்கும் போதே வேலைவாய்ப்பை பெறு கின்றனர். ஆனால், மீதமுள்ள லட்சகணக்கான பொறியியல் பட்டதாரிகள் மீண்டும் பயிற்சி வகுப்புகளை பெற்ற பின்னரே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இதற்கிடையே, உயர்கல்வி துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003-ல் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு திட்டங்களுக்காக மொத்தம் ரூ.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட மான இத்திட்டத்தில், பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட 700 பாடங்கள் மற்றும் 14,000க்கு மேற்பட்ட வீடியோக்களை http://nptel.iitm.ac.in, http://.youtube.com/iit ஆகிய இணையதள முகவரியில் ஆங்கிலத்தில் பார்த்து படிக்க முடியும்.

மாணவர்கள் படிக்கும்போதே, சுயமாக சிந்திக்கும் திறன் தாய்மொழி கற்றல் மூலமே மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்பி டிஇஎல் திட்ட தேசிய ஒருங்கிணைப்பா ளரும், சென்னை ஐஐடி பேரா சிரியரு மான மங்கல சுந்தர் கூறியதாவது:

தற்போது பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவர்கள் ஆங் கிலத்தில் படித்து முடித்து விட்டு, வேலைக்கு சென்றாலே போதும் என்று படித்து வருகின்றனர். மாணவர்கள் அவரவர்களின் தாய் மொழிகளில் படித்தால் தான், சுயமாக சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வும் முடியும். பல்வேறு வகை பொறியியல் படிப்புகளில் சுமார் 700 பாடங்கள் உள்ளன. இந்த பாடங்களை பிராந்திய மொழிகளில் இணையதளம் மூலம் படிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது, முதல்கட்டமாக பொறியியல் படிப்பில் முதலாண் டில் வரும் ‘பேசிக் எலக்ட் ரானிக்ஸ்’ என்ற பாடத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். அடுத்த 3 மாதங்களில் இந்த பாடத் திற்கான மொழிபெயர்ப்பு பணிகள் முடிந்துவிடும். இதைய டுத்து, http://nptel.iitm.ac.in என்ற இணையதளத்தில் அது வெளியிடப்படும். அடுத்தடுத்து பொறியியல் பாடத்திட்டங்களை பிராந்திய மொழிகளில் (இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம்) மொழி பெயர்க்கும் பணியை மேற் கொள்ளவுள்ளோம். இதற்காக மொத்தம் ரூ.4 கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளோம். இத்திட்டத் தின் மூலம் பொறியியல் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் பயன்பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x