Published : 08 Jul 2022 07:00 AM
Last Updated : 08 Jul 2022 07:00 AM
சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும்.
அத்தகைய மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு நிகழ்ச்ச்சி சென்னையில் நாளை (ஜூலை 9) தொடங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் மான்ட்ஃபோர்ட் இண்டோர் ஆடிட்டோரியத்தில் காலை 9 மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
இந்த வழிகாட்டு நிகழ்ச்சியில், சோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்னிங் மற்றும் சோஹோ நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, சென்னை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் செயலர் பி.ஜி.சுப்பிரமணியன், தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன் செயலர் டி.புருஷோத்தமன் பங்கேற்று, ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்க உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய படிப்புகளான இன்ஜினீயரிங், பிசிக்கல் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேஷன், ஃபுட் சயின்ஸ், ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பாடங்கள் குறித்தும், இவ்வகை பாடங்களைப் படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
வருங்காலத்தில் தொழில்நுட்பம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இதில் அறிந்துகொள்ளலாம். அமிர்தாவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், ரோபோக்கள் உட்பட மாணவர்களின் தயாரிப்புகள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இதுதவிர, தமிழ்நாடு இன்ஜினீயரிங் சேர்க்கை நடைமுறைகள் குறித்தும், AIEESE, JEE, BITSAT நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் முறைகள் பற்றியும், ஏரோ மாடலிங் மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் பற்றிய நேரடியான விளக்கக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புபவோர் https://www.htamil.org/00729 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment