Published : 04 Jul 2022 06:10 AM
Last Updated : 04 Jul 2022 06:10 AM
மதுரை: மதுரையில் அக்னி பாதை திட்டத் தில் சேர இளைஞர்களுக்கு பாஜக சார்பில் பயிற்சி அளிக்கப் பட்டது.
மதுரையில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பொன்மேனி ஜெய் நகரில் அக்னிபாதை பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றன. மாவட்ட இளைஞரணி தலைவர் கோகுல் அஜித் தலைமை வகித் தார்.
மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலிநரசிங்கப்பெருமாள், அக்னி பாதைத் திட்டம் குறித்து விளக்கினார். மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் வரவேற்றார்.
இளைஞர்கள், பெண்களுக்கு ராமச்சந்திரன், அனு அப்சரா, ராஜேஷ்குமார், ராஜ்குமார், நித்யா ஆகியோர் பயிற்சி அளித் தனர். நிர்வாகிகள் ஜெயவேல், பழனிவேல்,அமிர்தராஜ், கேசவராஜ், நாகராஜன், அர்ச்சனா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...