Published : 30 May 2016 08:21 AM
Last Updated : 30 May 2016 08:21 AM
தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியை தேர்வு செய்வதற்கு 3 எம்எல்ஏக் கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட் டத்தைச் சேர்ந்தவரை சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத் துவதால் இழுபறி நிலை நீடிக் கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்க ளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. காரைக்குடி தொகுதியில் கே.ஆர். ராமசாமி, விளவங்கோடு தொகுதி யில் விஜயதாரணி, நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார், தாராபுரத்தில் வி.எஸ்.காளிமுத்து, உதகையில் கணேஷ், கிள்ளியூரில் ராஜேஷ், குளச்சலில் பிரின்ஸ், முதுகுளத் தூரில் பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கே.ஆர்.ராமசாமியை சட்டப்பேர வைக் கட்சித் தலைவராக்க காங் கிரஸ் தலைமை விரும்புகிறது. ஆனால், நாங்குநேரி எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் மற்றும் விள வங் கோடு எம்எல்ஏ. விஜயதாரணி யும் சட்டப்பேரவைக் கட்சித் தலை வ ராக விரும்புவதால் இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சீனியரான கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சி தம்பரம் மற்றும் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் என இருவருக்குமே பொது வானவ ராக இயங்கி வருபவர். கோஷ்டி அரசியலில் ஈடுபடாத வர் என்ப தால், அவரை சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக்கவே மாநிலத் தலைமை விரும்புகிறது.
ஆனால், ஹெச்.வசந்தகுமார், விஜயதாரணி ஆகியோர் சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக வேண்டும் என்று விரும்புகின்றனர். இது தொடர்பாக கட்சி மேலிடத்துக் கும் அவர்கள் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது. இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், காங்கி ரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சின்னா ரெட்டி ஆகியோர், 8 எம்எல்ஏக்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்டனர்.
அப்போது, 8 எம்எல்ஏக்களில் வசந்தகுமார், விஜயதரணி, பிரின்ஸ் ஆகிய 3 எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமியை சட்டப்பே ரவைக் கட்சித் தலைவராக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கட்சி மேலிடத்துக்கு தெரியப்ப டுத்த ஷீலா தீட்சித் முயன்றார். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அப்போது தொடர்புகொள்ள முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் சோனியா ஈடுபடமாட்டார் என்ப தால் முடிவு எடுக்கப்படவில்லை. எனவே, திங்கள்கிழமை (இன்று) மாலைக்குள் காங்கிரஸ் சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் யார் என்பது முடிவாகிவிடும்.
இதற்கிடையே கே.ஆர்.ராம சாமியை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் தரப்பி லும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரைத் தவிர வேறு நபர்களை சட்டப்பேரவைக் கட்சித் தலைவ ராக் கினால், கோஷ்டி அரசியலுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று மாநிலத் தலைமை தேசிய தலை மையிடம் கூறியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது பற்றி நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமாரிடம் கேட்டபோது, ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள து. எங்கள் நால்வரில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் ஜூனியர் ஆவார். நான், விஜயதாரணி, பிரின்ஸ் என மூவரில் ஒருவரை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித்திடம் நான் வலியுறுத்தியுள்ளேன். அதே நேரத்தில், அகில இந்திய தலைமை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக யாரை அறிவித்தாலும் அவரை ஏற்கவும் தயார்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT