Published : 29 Jun 2022 05:02 PM
Last Updated : 29 Jun 2022 05:02 PM
சென்னை: தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மொத்த பயணங்களில் 62 சதவீத பயணங்களை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்காக தினசரி ரூ.5.98 கோடி செலவாகிறது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது.
இது தொடர்பான உத்தரவில், "தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம், மே 8-ம் முதலே நடைமுறைக்கு வந்தது. இதல் நகர்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்தப் பேருந்துகளில் முன்பு "மகளிர் பயணம் கட்டணம் இல்லை" என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தினசரி மேற்கொள்ளப்படும் பயணங்களில் 62 சதவீதம் பயணங்கள் இலவசமாக பயணம் என்று தெரியவந்துள்ளது.
மகளிர் இலவச பயணம் (8.5.2021 - 27.6.2022)
இதனைத் தவிர்த்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுதிறனாகளின் உடன் வருபவர்கள் ஆகியோருக்கு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள்
மாற்றுத்திறனாளிகள்
உடன் சென்றவர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT