Published : 29 Jun 2022 01:17 PM
Last Updated : 29 Jun 2022 01:17 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பத் தூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.109 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவுள் ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகள் சார்பில் சுமார் 8 ஆயிரம் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார்.
இந்நிலையில், திருப்பத் தூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும். அதற்கான அறிவிப்புகளை இன்று அவர் வெளியிடுவாரா? என திருப்பத்தூர் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மாவட்ட மக்களின் எதிர் பார்ப்புகளின் விவரம் வருமாறு:
திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதில் இருந்து திருப்பத்தூரில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க வேண்டும்.
ஆலங்காயத்தை தலை மையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும். வாணியம்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டுடிஐஜி அலுவலகம் தொடங்கவேண்டும். திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டுஒரு வக்பு வாரியத்தின் கண்காணிப்பாளர் அலுவ லகம் தொடங்க வேண்டும்.
திருப்பத்தூரில் கல்லூரி மாணவிகள் விடுதி தொடங்க வேண்டும். அதேபோல, சிறு பான்மையின (முஸ்லிம்) மாணவிகளுக்காக வாணியம் பாடி அல்லது ஆம்பூரில் மாணவியர் விடுதி தொடங்க வேண்டும். பாலாறு வட்ட அலுவலகம் திருப்பத்தூரில் தொடங்க வேண்டும்.
கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் திருப்பத்தூரில் அமைக்க வேண்டும். மகளிர் மேம்பாட்டுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இத்திட்டம் மூலம் ஊதுவத்தி தொழிலை மேம்படுத்தி அதை நல்ல விலைக்கு விற்பனை செய்ய தமிழக அரசின் என்டர்பிரைசஸ் அலுவலகம் திருப்பத் தூரில் தொடங்க வேண்டும்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனை யாக மாற்றி, இங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட உயர்தர சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ள வழிவகையும், அனைத்து வகையான சிறப்பு மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தோல் ஏற்றுமதி பூங்கா திருப்பத்தூரில் அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
திருப்பத்தூர் மாவட் டத்தில் முத்திரைத்தாள் துணை ஆட்சியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். பொதுப் பணித் துறையின் கட்டுமானம் மற்றும் நீர்வள ஆதார அமைப்புக்கு நிர்வாக பொறியாளர் அலுவ லகம் திருப்பத்தூரில் தொடங்க வேண்டும். ஏலகிரி மலை மற்றும் ஜவ்வாது மலைப்பகுதி சாலைகளில் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வாணியம்பாடி வட்டம், நெக்னாமலை கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அதேபோல, பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வாணியம்பாடி புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை, ஜலகாம்பாறை, வீராணமலை, வெலதிகாமணிபெண்டா ஆகிய பகுதி சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆலங்காயம் முதல் ஒடுக்கத்தூர் வரை உள்ள சாலையை பசுமை சூழல் மாறாமல் விரிவாக்கம் செய்ய வேண்டும். திருப்பத்தூரில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் கொண்டு வர அரசாணை வெளியிட வேண்டும். வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிட வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்ட மக்களின் அத்தியாவசியமான இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரியுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT