Published : 28 Jun 2022 07:56 PM
Last Updated : 28 Jun 2022 07:56 PM
சென்னை: "திமுகவின் கதை என்பது சாமானியர்களின் கதை" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 - 1967" என்ற ஆங்கில நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ் மற்றும் ஐசிஏஎஸ்எம்பி இணைந்து பதிப்பித்துள்ள "Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 - 1967" நூலை இன்று வெளியிட்டு நூலாசிரியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், சுப குணராஜன் மூவரையும் பாராட்டினேன்.
தி.மு.க.வின் கதை என்பது சாமானியர்களின் கதை! அது சாமானியர்கள் இணைந்து ஆட்சியைப் பிடித்த கதை மட்டுமல்ல. ஒரு மாபெரும் அறிவியக்கத்தை முன்னெடுத்த கதையும் கூட! அது பல கோணங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, மேலும் பல ஆங்கில நூல்கள் கல்விப்புலத்திலும் கழகத்தின் சாதனையைச் சொல்ல வேண்டும்!" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
தி.மு.க.வின் கதை என்பது சாமானியர்களின் கதை!
அது சாமானியர்கள் இணைந்து ஆட்சியைப் பிடித்த கதை மட்டுமல்ல. ஒரு மாபெரும் அறிவியக்கத்தை முன்னெடுத்த கதையும் கூட!
அது பல கோணங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, மேலும் பல ஆங்கில நூல்கள் கல்விப்புலத்திலும் கழகத்தின் சாதனையைச் சொல்ல வேண்டும்!— M.K.Stalin (@mkstalin) June 28, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT