Published : 28 Jun 2022 03:47 PM
Last Updated : 28 Jun 2022 03:47 PM
சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, ஆண்டுக்கு 5 முறை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரில் சென்னை பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்ற அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்தார். இது தொடர்பாக அறிவிப்பில், "சென்னைப் பள்ளி மாணவர்களிடையே மேடைப் பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவப் பண்பை வளர்க்கவும், சர்வதேச விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்தவும், ஒழுக்கம், சகிப்புத்தன்மை, ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்கவும், பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் இளைஞர்கள் பாராளுமன்ற குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதன்படி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றம் அமைக்க அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர் நாடாளுமன்றங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் வாரம் : இளைஞர் நாடாளுமன்றத்திற்கான அலுவலர்கள் குழு அமைக்கப்படும்
ஜூலை 2வது வாரம்: ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்
ஜூலை 3 வது வாரம்: இளைஞர் நாடாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
ஜூலை 4வது வாரம்: 5 அமைச்சர் பதவி உருவாக்கப்படும்
ஆகஸ்ட் முதல் வாரம்: தலைவர், எதிர் கட்சி தலைவர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆகஸ்ட் 2,3 வது வாரம்: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
செப். முதல் வாரம் : முதல் நாடாளுமன்ற கூட்டம்
அக். 2வது வாரம் : 2வது நாடாளுமன்ற கூட்டம்
அக். 4வது வாரம் : 3வது நாடாளுமன்ற கூட்டம்
நவ. 2 வது வாரம் : 4வது நாடாளுமன்ற கூட்டம்
நவ. 4வது வாரம் : 5வது நாடாளுமன்ற கூட்டம்
டிசம்பர் முதல் ஜனவரி வரை : பல்வேறு போட்டிகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT