Published : 27 Jun 2022 05:54 AM
Last Updated : 27 Jun 2022 05:54 AM

கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் - திருநெல்வேலி(06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை(06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

திருச்சி - ஈரோடு(06809/06810), திருச்சி - ஈரோடு(06611/06612) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 9-ம் தேதியில் இருந்தும், அரக்கோணம் - கடப்பா (06401/06402), கோவை - சேலம் (06802/06803), திருச்சி - கரூர்(06881/06882), சேலம் - கரூர் (06821/06822) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 27-ம் தேதியில் இருந்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் - திருச்சி (06683), திருச்சி - காரைக்கால் (06880), காரைக்கால் - தஞ்சாவூர்(06457) முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 23-ம் தேதி, விழுப்புரம் - மயிலாடுதுறை (06991/06990) முன்பதிவில்லா ரயில் ஜூலை 11-ம்தேதி, தஞ்சாவூர் - காரைக்கால் (06832) ரயில் ஜூலை 24-ம் தேதி உட்பட தெற்கு ரயில்வேயில் 34 முன்பதிவில்லா ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x