Published : 26 Jun 2022 03:41 PM
Last Updated : 26 Jun 2022 03:41 PM
சென்னை: சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள்.
இதன்படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
இவர்களின் விவரம்:
திருவெற்றியூர் : சரவண குமார் ஜவாத்
மணலி: கணேசன்
மாதவரம்: சந்தீப் நந்தூரி
தண்டையார்பேட்டை: வினய்
ராயபுரம்: விஜய கார்த்திகேயன்
திரு.வி.க.நகர் : ரன்ஜீத் சிங்
அம்பத்தூர்: சுரேஷ் குமார்
அண்ணா நகர்: பழனிசாமி
தேனாம் பேட்டை: ராஜாமணி
கோடம்பாக்கம்: விஜயலட்சுமி
வளசரவாக்கம்: மணிகண்டன்
ஆலந்தூர்: நந்தகோபால்
அடையாறு: நிஷாந்த் கிருஷ்ணா
பெருங்குடி: ரவி சந்திரன்
சோழிங்கநல்லூர்: வீரராகவ ராவ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT