Published : 26 Jun 2022 02:55 PM
Last Updated : 26 Jun 2022 02:55 PM
சென்னை: 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூரில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரணியன் கோரிக்கை வைத்தார்.
சென்னை ஓமந்தூரர் பன்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கோரிக்கை மனுவை அளித்தார். இந்த மனுவில் 7 கோரிக்கைகளை வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளின் விவரம்:
1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும்.
2. கோயம்புத்தூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வேண்டும்
3. மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்கு முறை விதிமுறைகள், முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதில் மாநிலங்களின் பங்கினை குறைக்கும் விதிகள் நீக்கப்பட வேண்டும் என்று 31.07.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளோம். வரைவு விதிமுறைகளில் பிரிவு 10.1 மற்றும் அதன் கீழ் உள்ள துணைப் பிரிவுகள் மருத்துவக் கழகத்தில் பதிவு செய்ய தகுதி தேர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வாக மாற்றுவது என்பதை மத்திய அரசு அரசு கைவிடவேண்டும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரையை நசுக்குவதாகும்.
4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ வேண்டும்
5.உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை காண வேண்டும்.
6.பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கையை 7.50 விழுக்காட்டிலிருந்து – 20 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்றும்,
7. 50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT